”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது. “ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.” இலக்கணம் மாறுதே!