Book Pick
0
அதிமதுர மதுர

அதிமதுர மதுர

R.P. ராஜநாயஹத்துடன் கல்லூரியில் படித்தவர் எனக்கும் நண்பர்.  நாற்பதாண்டுகளுக்குப் பின் பேசியவர், கல்லூரியில் ராஜநாயஹம் ஒரு ஹீரோ போல விளங்கியதைக் கூறினார். அப்போது படித்தவர்கள் யாருக்குமே இவரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு துரதிருஷ்டம் அந்தக் கல்லூரியில் அப்போது பெண்கள் படிக்கவில்லை. ராஜநாயஹம் ஒரு நல்ல Conversationist. அதை நான் தான் சொல்ல முடியும்.  என்னுடன் புதிதாக ஆவலாகப் பேச ஆரம்பிக்கும் யாரும், இரண்டு நிமிடத்தில் We will keep in touch என்று உரையாடலை முடித்துக் கொள்வார்கள்.  ராஜநாயஹம் எதிரில் இருப்பவருக்கு எது ஆர்வம் மிகுந்ததோ அதைப் பேசுவது மட்டும் இல்லாது, அவர் பேச்சின் தரமும் எதிரிருப்பவருக்கு ஏற்ப மாறுபடும். அரைமணிநேரப் பயணம் என்றாலும் வாகனஓட்டியோ, உடன் பயணிப்பவரிடமோ இருந்து கிரகிக்க இவருக்குத் தகவல்கள் கிடைக்கும்.  நான் அரைநாள் ஒருவருடன் இணைந்து பயணித்து அவருடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்திருக்கிறேன். Profanity பற்றி இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியதாகிறது.  மதுரை ஆரப்பாளையத்தில் பெண்கள் பேசிய கெட்ட வார்த்தைகளைத் தாண்டி தமிழில் புதிதாகக் கெட்ட வார்த்தை யாரும் பேசுவதற்கில்லை.  ராஜநாயஹம் Profanityஐ பெரும்பாலும் நகைச்சுவைக்கு உபயோகிப்பவர்.  ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக இவர் உபயோகித்து நான் பார்த்ததில்லை.  மிஸ் கெட்டவார்த்தையில திட்டுறான் என்றால் மிஸ் என்ன சொல்லிடா திட்டுன என்று தவறாது கேட்பார்.  எல்லோருக்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது.  யாரும் பார்த்து புனிதர் பட்டம் கலையுமோ என்ற பயமும் இருக்கிறது. R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் வரிசையாக ஜெய்ரிகி பதிப்புகளாகத் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.  ராஜநாயஹத்தின் நினைவாற்றல் ஆச்சரியம் அளிப்பது. நல்லதோ, கெட்டதோ பத்துபேரின் வாழ்க்கைகளில் நடக்க வேண்டியவை  இவரது ஒருவரின் வாழ்விலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இவர் எழுத்தின் முதிர்ச்சிக்கு அதைத்தான் நான் முக்கிய காரணமாகச் சொல்வேன்.
Non-returnable
Rs.95.00 Rs.100.00
Customize
Author
R.P.ராஜநாயஹம்
Publisher
ஜெய்ரிகி பதிப்பகம்
Genre
கட்டுரை
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.