என் தந்தை கவிஞர் வயலூர் சண்முகம் அவர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார்: 'கண்ணதாசனின் உரைநடை பாக்கியராஜின் திரைக்கதை இவை இரண்டும் உன் எழுத்தில் இருக்கும்படியாக பார்த்துக்கொள்!" என்று. அதை இன்று வரை என் எழுத்துகளில் கடைபிடிக்கிறேன். கட்டுரை எனக்கு பிடித்த இலக்கிய வடிவம். கடந்த பத்தாண்டுகளாக நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், இதில் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் இந்து தமிழ் திசை' நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகி பரவலான கவனம் பெற்றவை. ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர் பனை என்றொரு உயர் திணை', 'தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு நூற்றாண்டு வரலாறு ஆகிய கட்டுரைகள் அரசின் கவனத்துக்குச் சென்றதும் பல நேர்மறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் என் எழுத்துக்குக் கிடைத்த பெருமிதமான அங்கீகாரம்.