நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்குமார் ஏன் இப்படி செய்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணோடு காட்சியளித்து அவன் அவளுடையக் குழப்பத்தை தீர்த்து வைத்தான். உடனே தாத்தாவிடம் சென்று விஷயத்தை சொல்லி திருமணப் பேச்சை நிறுத்த வேண்டும் என்று தான் சுமாலினி நினைத்தாள்.ஆனால் தாத்தா அவள் பேச்சைக் கேட்க வேண்டுமே ? கேட்டு மதிக்க வேண்டுமே! நடக்கிற காரியமா ? இந்த அழகில் சம்பத்குமாரின் பெரியப்பா மகன் பாபு வேறு சுமாலினியைத் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றுஅவனை மிரட்டிக் கொண்டிருக்கிறானே! இவர்கள் எல்லோரிடமிருந்தும் தப்பிக்க எண்ணி சுமாலினி தன்னைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆளான சித்தியின் காரில் ஏறி அமர்ந்தாள். என்ன அது சித்தியின் கார் இல்லை என்றுசுமாலினி கண்டறிந்த போது இரவு மணி இரண்டு !!