பிரபாகரன் வாழ்வும் மரணமும்

பிரபாகரன் வாழ்வும் மரணமும்
Non-returnable
Rs.195.00 Rs.195.00
Customize
Author
பா. ராகவன் Publisher
ஸீரோ டிகிரி பப்ளிஷிங்|எழுத்து பிரசுரம் Genre
ஈழம் Share :
Product Details
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் , அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.ஆயிரக் கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது.அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள்.எப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்?பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.
Ratings And Reviews


