சூத்ரதாரியாக இருந்து நடத்துவது, இன்றைய இளைய தலைமுறை. அந்தத் தலைமுறையினரில் முக்கியமானவன், ஒருவன் தலைவனாக மனுபரதன் வழி நடத்திச் செல்ல, அவன் பின்னே, மற்ற குடும்பத்தினர் நடந்தனர். ‘மனுபரதன்' என்கிற பெயர், தாரிணிக்கு விசித்திரமாகப்பட்டது. மனுதர்மத்தை அப்படியே கடைப்பிடித்து ஒழுகுகிற பரதனா? அப்படி ஒருவன் இந்தக் காலத்தில் அதுவும் இன்றைய நிலையில், இந்நாட்டில் இருக்க முடியுமா? அல்லது, அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெயர் வைத்த பெற்றோர், தலையில் அடித்துக் கொள்ளும் விதமாக வாழ்கிறவனா? அப்படி இராது. இந்த 'மனுபரதன்' தலைவனாக இருந்து, வழி நடத்துவதாக அல்லவா, நந்தன் எழுதியிருக்கிறான்! ஆனால் 'தடியெடுத்தவன் தண்டல்காரன்' மாதிரியாகவும் இருக்கலாம்.!