
ஒரு பொருளை நாம் எங்கிருந்து பெறுகிறோம் என்றால் கடையிலிருந்து என்போம். ஆனால் அப்பொருள் கடைக்கு எப்படி வந்தது, அதை யார் செய்திருப்பார்கள் என்றால், குழந்தைகளாகிய நாம் யோசிக்கக்கூடும். நிலத்திலிருந்து விளையும் பொருட்களையும், அதை விளைவிக்கும் மனிதர்களையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?. உழவர்கள் எவ்வாறு பருவமறிந்து பயிரிடுகிறார்கள்? தானிய உற்பத்தியில் அவர்கள் ஈடுபடும்போது மழையும், காற்றும், பனியும், வெயிலும் எவ்வகையில் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; நிலமாகிய களஞ்சியத்தில் விளைச்சலுக்கு உதவிய இயற்கையே, அதற்கு இடையூறாக இருக்குமா ? அவ்வாறு இருந்தால் தங்கள் வயல்களை அவர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திட வேண்டும்தானே!


